
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஔவையின் தமிழ் அள்ளிப் பருகவே யாம் வந்தோம் என்ற தமிழ் இறையோன் முருகனுக்கு முன்பும், தாய் மொழியில் வழிபாடு இல்லை. என் அன்பு பிள்ளைகளே… தாய் மொழியில் கற்றவன் எல்லாம் சிந்திக்கிறான், படைக்கிறான். தாய்மொழியில் கல்லாதவன் பயன்படுத்துகிறான்.
உன்னை மறந்து நீ உறங்குகிற போது… உன் கனவு எந்த மொழியில் வருகிறதோ, அது தான் உன் கல்வி மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் உன் சிந்தனை மொழி. ஆழ்ந்து உறங்குகிற போது உனக்கு வருகிற கனவு ஆங்கிலத்தில் வந்தால்… நீ என் இனம் சார்ந்தவன் இல்ல. சோரம் போய்விட்டாய்.. இனம் மாறிவிட்டாய்.. உன் இரத்தத்தை சோதிக்கணும், பரிசோதனை செய்யனும்.
உலகெங்களும் அவனவன் தாய் மொழியில் தான் கல்வி இருக்கின்றது. ஆனால் உன் கல்வி மொழியாக தமிழ் இல்லை. பெருந்தலைவர் காமராஜர் காலம் வரை பயிற்று மொழி தமிழ். ஆங்கிலம் பாடமொழி. பிறகு பாட மொழி தமிழ், பயிற்று மொழி ஆங்கிலம். பிறகு விருப்பம் மொழி தமிழ், எந்த தமிழனும் விரும்பலை மொழி செத்துட்டது என தெரிவித்தார்.