
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது, சவாலுக்கு தயார் அண்ணா 1% என்ன ? 30% அதிகமா வாங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற கட்சி 2024 க்கு பின்னாடி இருக்காது. நீங்க பாருங்க ? எத்தனை நாளைக்கு வெறுப்பை விதைத்து, ஒரு கட்சி நடத்த முடியாது. வெறுப்பை விதைத்து இளைஞர்களிடம்…
அதாவது நாம் தமிழர் கட்சி இன்றைக்கு அவர்களால் என்ன செய்ய முடியலன்னா…. மத்தியில் ஆட்சியில் இருக்காங்களா…. மாநிலத்தில் ஆட்சிக்கு வர போறாங்களா…. கொள்கைகள் என்ன ? தனிமனித அடிப்படையில எப்பவுமே சீமான் அவர்களுடைய கருத்துக்கு பல இடத்துல நான் ஆதரவு சொல்லி இருக்கேன்.ஆனால் எலக்சன் என்று வரும்போது..
மக்கள் அப்படி பார்க்க மாட்டாங்க… யார் ஆட்சிக்கு வராங்க ? யார் மத்தியில ஆட்சிக்கு வர்றாங்க ? யார் மாநிலத்தில் ஆட்சிக்கு வர்றாங்க ? இதெல்லாம் பார்த்து தான் மக்கள் ஓட்டு போடறாங்க. சவால் என்ன ? எங்களுடைய தொண்டனே சவாலை ஏத்துக்குவான்.. அதெல்லாம் தயாரா இருக்கோம்… எல்லா இடத்துக்கும்
அண்ணாமலை ஒபினியன் உங்களுக்கு தெரியும்… பாரதிய ஜனதா கட்சியினுடைய டெல்லி ஒப்பினியன் உங்களுக்கு தெரியும்…. பாரதிய ஜனதா கட்சி ஒபினியன் உங்களுக்கு தெரியும்… அதனால என்னுடைய கருத்துக்களை உரக்கமாக சொல்லிவிட்டு இருக்கேன். இன்னைக்கு யாரெல்லாம் நம்முடைய தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்களோ, அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கு என தெரிவித்தார்