தமிழகத்தில் அதிவேகமாக டெங்கு காய்ச்சலுடன் இன்புளுயன்சா தொற்றும் பரவுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் இன்புளூயன்சா தொற்றும் பரவுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.
மருத்துவ, சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறினார். மேலும் இந்த டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
