இந்தியாவின் பெயர் ”பாரத்” என  மாற்றினால் அனைத்து பாரத் அதிமுக என மாற்றுவீங்களா என்ற கேள்விக்கு… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஹா ஹா என சிரிச்சிகிட்டே…  புது கான்செப்ட் சொல்லி இருக்கீங்க. அது வரும்போது பாத்துக்கலாம். இப்ப எதுக்கு அத போய் பேசிக்கிட்டு…  யுகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல கூடாது என்றார்.

G – 20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்பு இருந்த பெயர் பலகையில் ”பாரத்” என வைத்தது பற்றி பேசிய செல்லூர் ராஜீ, அதை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும். ஏற்கனவே ”பாரத்” என பேச வேண்டாம் என பிரதமரே  சொல்லிவிட்டார்.  எனவே அதை பற்றி  விமர்சனம் பண்ண கூடாது.

இன்னைக்கு நாட்டிலே எவ்ளோ பிரச்சனை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இதை போய்  பேசிகிட்டு. பிரதமரே இதை பற்றி பேச விரும்பல. அப்பறோம் ஏன் பேசணும். எனக்கு இந்தியா தான் விருப்பம். இந்தியா ”பாரத்” எல்லாம் ஒன்னு தான் என தெரிவித்தார்.