கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அந்த ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டல் மாடியில் ஏறி நின்று ரவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவியை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சரியான நேரத்தில் ரவியை காப்பாற்றிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.