
1999 ஆம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்று 24 வருடங்கள் ஆகிய நிலையில் நேற்று முன்தினம் கார்கில் வெற்றி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தினத்தில் நடந்த விழாவுக்கு கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கார்கில் போரில் உயிர் இழந்த இந்திய வீரர் உதயமான் சிங் பற்றி அவரது தாய் கந்தா தேவி போரின் போது நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது போர் நடந்து கொண்டிருந்தபோது தனது மகன் உதயமான் சிங்கை வீட்டிற்கு திரும்பி வந்து விடுமாறு கந்தா தேவி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு இந்திய வீரர் உதயமான் வீட்டிற்கு திரும்புவதை விட எதிரியின் துப்பாக்கி குண்டை என் நெஞ்சில் வாங்கிக் கொள்வேன் என கூறியுள்ளார். அதற்கு மேல் கந்தா தேவி மகனிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் அதுதான் உதயமான் கடைசியாக அவரது தாயிடம் பேசியது என்று கூறி கண்கலங்கியுள்ளார்.