மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த அநீதி குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த வேதாந்த் படேல்  கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே கூறியது போல் மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமாகவும் அமைதியாகவும் தீர்வு காண வேண்டும் மத்திய அரசு இந்த பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். உயிர் மற்றும் உடைமைகளுக்கு உகந்த பாதுகாப்பை கொடுக்க வேண்டும்.

அம்மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாண கோலத்தில் இழுத்த செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. போராட்டங்களை பாலியல் தொடர்பான வன்முறையாக்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இந்த சம்பவங்கள் நாகரீக சமூகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துபவை என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். பாதிப்படைந்தவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் அமெரிக்கா ஆதரிக்கும்” என கூறியுள்ளார்.