ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு பெண்கள் ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் சதுரங்கப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டை சேர்ந்த சரசதத் கதேமல்ஷரி எனும் பெண் பங்கேற்றார். ஆனால் அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். இதனால் அவருக்கு கைது வாரண்ட் ஈரானில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் அது பற்றி பயம் கொள்ளாமல் 2023 ஜனவரி மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு குடி பெயர்ந்தார். அங்கு அவருக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டது. அவரது சிறப்பு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.