பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ரூ.6 லட்சம் மதிப்பு….” ரயிலில் தவறவிட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்…. குவியும் பாராட்டுகள்…!!
சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது…
Read moreதலைத்தெறிக்க ஓடிய இருவர்… மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது…
Read more