சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…
Read moreசாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…
Read more