
சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11ஆம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை 2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 1 முதல் நடைபெற்ற வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாடி வருகிறார்கள்.
இந்த போட்டிகள் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் ஜூலை 11 வரை தினமும் மாலை நான்கு மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தல 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.