
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணத்தில் நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். பைக்கில் வந்த அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஆடையை கழற்றி நிர்வாணமாகிவிட்டு அந்த பகுதியில் பர்தா அணிந்த பெண் ஒருவர் நடந்து சென்றதைப் பார்த்து அவரை பின்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதை உணர்ந்து அந்தப் பெண் சட்டென தாக்கியதில் இளைஞன் ஆடை அணிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றுவிட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து அந்த இளைஞர் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.