
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி யான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும். விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக தமிழக அரசு 800 கூடுதல் பேருந்துகளை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.