வெப்பம் அதிகமாகி சிறிது மழை பெய்யும்போது காற்றில் ஈரப்பதம் வர ஆரம்பித்து ஈரப்பதமானது அதிகரிக்கும். இதனிடையே ஏசியின் வேலை, வெப்பத்தை குறைத்து தன் குளிர்ந்த காற்றால் வீட்டையும் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருப்பது தான். பல்வேறு சமயங்களில் ஏசி நமக்கு தேவையான குளிர்ச்சியை வழங்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். ஏசி அறையை குளிர்விக்காமல் உள்ளதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.

ஏசியின் வாயிலாக மழை நாட்களில் குளிர்ச்சியை அதிகரிப்பதற்கு கூலிங் மோடில் வைத்தால் போதும். இவை குளிரூட்டியின் செயல் திறனை அதிகரித்து குளிர்ச்சியை வழங்கும். ஏசியை பயன்படுத்திக்கொண்டு மின் விசிறியை ஆன் செய்யலாமா என்பது ஏராளமானோரின் மனதில் எழும் கேள்வி. சீலிங் ஃபேனை ஏசியுடன் சேர்த்து இயக்குவதால் இரண்டில் இருந்தும் வெளிவரும் காற்று ஒன்றோடு ஒன்று மோதுகிறது.

இதனால் ஏசியின் முன் அமர்ந்திருப்பவருக்கு குளிர்ச்சியோ, காற்றோ வாராது. இதில் சீலிங் ஃபேன் மேல் இருந்து காற்றை இழுக்கும்போது ஏசி கீழே இருந்து காற்றை இழுக்கிறது. ஆகவே இவை இரண்டும் காற்று ஓட்டத்தை தடைசெய்து குளிர்சாதன பெட்டியின் முன் அமர்ந்திருப்பவருக்கு காற்று சென்றடையாது. எனவே அறையில் ஏசி இயங்கினால் சீலிங் ஃபேனை ஆன் செய்வதை தவிர்க்க வேண்டும்.