டெல்லியில் உள்ள திரையரங்குகளில் பிரபாஸ் நடித்துள்ள ஆதி புரூஸ் திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிகரித்த 2000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ராமனாக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3d தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.