ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ராமனாக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3d தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும்  தயாரிப்பாளர்கள் ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு இருக்கையில் ஆஞ்சநேருவின் புகைப்படத்துடன் ‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகிறது.