தமிழகத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில் உதகைக்கு இன்று ஜூன் 1 ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. பிரபாகர் அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கும் கடந்த ஒரு மாதமாக கோடை சீசன் முன்னிட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக  ஊட்டி மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.