சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட முதலீடு ஈர்ப்பு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் ஈர்க்க 9 நாட்கள் அரசமுறை பயணத்தை முடித்து அவர் சற்றுமுன் தமிழ்நாடு திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூ.3,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு சென்றோம். ஆனால், 3,231 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.