தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 15 வகையான வேளாண் விளைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு 45 லட்சம் ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாடு அதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. விளைபொருள்களுக்கு மட்டுமில்லாமல் இதர பொருள்களுக்கும் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.