
பெங்காலி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசந்திர தாஸ் குப்தா. இவர் நேற்று ஷூட்டிங் முடித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாரா நகரில் இருந்து பைக் டாக்ஸியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடிகை சுசந்திர தாஸ் குப்தா திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி நடிகை மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்