பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண்களின் உடல்களோடு உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இறந்த மகள்களின் உடல்களை புதைத்த பிறகு பெற்றோர்கள் கல்லறையில் பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இறந்த பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா என்று அழைக்கிறார்கள். இத்தகைய மனநிலை இருப்பவர்களுக்கு சடலங்களை பார்க்கும்போது பாலுணர்வு தூண்டப்படும். இவர்கள் இறந்த சடலங்களை புதைத்த பின் வெளியில் எடுத்தோ அல்லது கொலை செய்தோ பிணங்களை வண்புணர்வு செய்வார்கள்.

இந்த சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், 40% பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என தேசிய மனித உரிமை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு கராச்சியில் உள்ள வடக்கு நிஜாமோபாத்தில் உள்ள கல்லறைக் காப்பாளராக முகமது ரிஸ்வான் என்பவர் இருந்தார். இவர் 48 இறந்த பெண்களின் சடலங்களை தோண்டி பாலியல் வன்புணர்வு செய்வது தெரிய வந்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.‌ மேலும் சடலங்களுடன் பாலியல் வன்புணர்வு கொள்ளும் பழக்கம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் தற்போது இறந்த மகள்களின் கல்லறைக்கு பெற்றோர்கள் பூட்டு போடுவது அதிகரித்து வருகிறது என சர்வதேச ஊடகம் செய்து வெளியிட்டுள்ளது.