ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு அரசியலில் நுழைந்த துரை வைகோவிற்கு கட்சிக்குள் செல்வாக்கு இல்லை.

இந்த நிலையில்தான் மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து மதிமுக முன்னாள் நிர்வாகி நாஞ்சில் சம்பத் கூறும்போது, மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என துரைசாமி தெரிவித்துள்ளது நல்ல ஆலோசனை என்றும், ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடல் போல இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.