பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் அடுத்த மூன்று மாசத்துக்கு தேவையான மின்சாரத்துக்கு டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் ட்டுள்ளன எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் ஒருவர் வீட்டில் கரண்ட் இல்லை என்று ட்வீட் செய்திருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “உங்கள் மின் இணைப்பு எண்ணை  கொடுங்கள்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் தங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.