சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.