திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு ச500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் RSபாரதி சார்பில் வில்சன் MP அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.