சென்னையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை காண மெட்ரோ சார்பில் இலவச மினி பஸ் சேவை விடப்படுகிறது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மெட்ரோ ரயிலில் நெரிசல் மிகு சேவையை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.