தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு பட்ஜெட் தாக்களின் போது நேற்று செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.‌ 1000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி மாதம் ரூ. 1000 உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர் என நெட்டிசன் ஒருவர் கலாய்த்து ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது கபிலன் என்ற இணையதளவாசி ஒருவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், 2021-ம் ஆண்டு வேட்பு மனுவில் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ. 1000 என்று தாக்கல் செய்தார் அண்ணன் சீமான். ஆகவே தமிழக அரசு வழங்கும் குடும்பத்தலைவிக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மிக தகுதியான நபர் அண்ணியார் அவர்களே. ஆகவே அந்த 1000 ரூபாயை தகுதியின் அடிப்படையில் அண்ணன் குடும்பத்திற்கு வழங்கினால் 10-20 முட்டை அவித்து நெய் சோறு வைத்து 3 மணிக்கு வரும் காக்காவுக்கு சாப்பாடு வைக்க உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.