தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு என்ற தகவலை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தமிழக அரசு அனுப்பியுள்ளது. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் டெம்ப்ளேட்களாகவும், வீடியோக்களாகவும் தயார் செய்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் twitter பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் பத்திரப்பதிவு கட்டணம் நான்கிலிருந்து இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள தகவல் குறித்த லிங்கை தமிழக அரசு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது. இதுவரை அரசின் அறிவிப்புகள் அனைத்தும் தினசரி நாளிதழ்கள்,சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக குறுஞ்செய்தி மூலமாக அரசு வெளியிட்டுள்ளது.