தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் விவசாய கடன் தள்ளுபடிக்காக 3993 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதில் 2391 கோடி விவசாய கடன் தள்ளுபடிக்கு வழங்கப்படும் என்றார்.

அதன் பிறகு 1000 கோடி ரூபாய் நகை கடன் தள்ளுபடிக்கு வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.