சமூக ஊடக ஜாம்பவான்களான பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா மற்றொரு புதிய செயலியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பயனர்கள் உரை புதுப்பிப்புகளை பகிரக் கூடிய ட்விட்டர் போன்ற ஒரு பரவலாகப்பட்ட சமூக வலைப்பின்னல் பயன்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய செயலி கிடைத்தால் இன்ஸ்டாகிராம் உள்நுழைவு விவரங்களுடன் பதிவு செய்யலாம் என தெரிகிறது.whatsapp மற்றும் பேஸ்புக் ஆகியவை ஏற்கனவே பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள நிலையில் புதிய செயலிக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.