தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று கும்மனூர் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.
இதனையடுத்து யானைகள் சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சில மணி நேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்கு சென்றது. அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
