சர்வதேச யோகா திருவிழா ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ரிஷிகேஷில் நடைபெறும். சர்வதேச யோகா திருவிழா என்பது புனிதமான கங்கை நதிக்கு அருகில் ஆன்மிக சூழலுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்படும். அதன் பிறகு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் யோகாவை அறிமுகப்படுத்துவதற்கான நல் வாய்ப்புகளை சர்வதேச யோகா திருவிழா கொடுக்கிறது. இந்நிலையில் சர்வதேச யோகா திருவிழாவின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
கடந்த 1999-ம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால தியான வகுப்புகள் பூஜ்ய ஸ்ரீ சுவாமி வேத பாரத் ஜியின் வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெற்ற நிலையில், யோகா ஆசனங்கள் அனைத்தும் யோகாச்சாரியா ஸ்ரீ பாரத் பூஷன் ஜி மால் கற்பிக்கப்பட்டது. யோகாவின் திருவிழாக்களை கண்டறிய போது அதன் புகழ் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற யோகா திருவிழாவில் அதிக அளவிலான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் யோகாசனம் செய்வதால் மன அமைதி கிடைப்பதோடு, ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
