தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த மாத இறுதியில் இப்படம் வெளியாக இருக்கின்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

சமந்தா அண்மையில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றார். அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் சமந்தாவின் சிறுவயது போட்டோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் சமந்தா கராத்தே உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கின்றார். இந்த புகைப்படமானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.