கோலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சென்ற மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் நடிக்கின்றார். இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. தற்போது படத்தின் படபிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் காஷ்மீரில் படபிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் செலிப்ரேஷன் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. லியோ திரைப்படத்தின் ப்ரொடக்ஷன் டிசைனர் சதீஷ்குமார் பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி பர்த்டே செலிப்ரேஷன் செய்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.