அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் அவரின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அஜித் தற்போது ஸ்காட்லாந்தில் கார் ஓட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி நிலையில் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றார்கள். மேலும் அஜித் கெத்தாக கார் ஓட்டுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.