தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். அண்மையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்தில் புதிய கெட்டபில் இருக்கும் விக்ரமின் போட்டோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த போட்டோக்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.