ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இணைந்திருக்கின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்றார். படப்பிடிப்பு 70% முடிவடைந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் ஒரு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. தற்போது அவருக்கு பதிலாக மற்றொரு பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி  நடிகர்கள் நடிப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.