மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் தக்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தற்போது தக்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பாக ரியா சிபு தயாரிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹிருது ஹருன்,  சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்கான் என பலர் நடித்திருக்கின்றார்கள். சாம்.சி.எஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

இந்தப் படத்தின் கதாபாத்திர அறிமுக விழா சென்ற வருடம் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. ட்ரெய்லரில் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பதால் சோசியல் மீடியாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.