கன்னட சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் மன்தீப் ராய்(74). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று காலை மாரடைப்பால் இறந்தார்.

மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புலம் பெயர்ந்த அவர், பிறகு கன்னட திரைத் துறையில் நடிக்க  துவங்கினார். இதுவரையிலும் அவர் 500-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதில் புஷ்பக விமானம், நாகரஹாவு, ஆப்த ரக்சகா, குரிகலு சார் குரிகலு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.