ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கபட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனால் கிராமங்களில் என்னென்ன தேவை என்பது பற்றி அதிகாரிகளிடம் மனுவாக தாருங்கள் என கூறினார்.

மேலும் மலைப்பகுதியில் பணியாற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம் மக்களோடு மக்களாக சேர்ந்து அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு எந்த கைத்தொழில் செய்து தந்தால் வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்து விவசாயிகளுக்கு உதவுங்கள் என தெரிவித்தார்.