டைரக்டர் பிரேம் குமார் இயக்கத்தில் சென்ற 2016ம் வருடம் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியான மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் “96”. பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல்வேறு உணர்ச்சிகளுடன் பிரேம் குமார் உருவாக்கி இருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற காதலே..காதலே, லைப் ஆஃப் ராம் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.