சசிகுமார் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சசிகுமார் தற்போது அயோத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்க மந்திர மூர்த்தி இயக்குகின்றார்.

இத்திரைப்படம் ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு மதப் பிரச்சனைகளை பேசும் படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் ஷர்மா என பல நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.