கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் திரைப்படத்திலும் தெலுங்கில் நானியுடன் தசரா திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இவ்விரு திரைப்படங்களும் இந்த வருடம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் தமிழில் நடித்து வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.

இந்த திரைப்படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். இதனை நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கின்றார். அந்த போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கையில் இரண்டு துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கின்றார். மேலும் அந்த போஸ்டர் கார்ட்டூன் டைபிலான இமேஜ் லுக் கொண்டிருப்பதால் அது ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது.