வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த கடைகள் பொது ஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகின்றது. இதை தவிர்த்து குடிநீர், சொத்து வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில்வரி என பல்வேறு வரிகள் மாநகராட்சி சார்பாக வசூலிக்கப்படுகின்றது.

மாநகராட்சி பொருத்தவரை வரவு செலவு கணக்குகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் என இரண்டு முறை கணக்கிடப்படும். வருகின்ற மார்ச் மாதத்துக்குள் கடை வாடகை பாக்கி குடிநீர் போன்ற அனைத்து வரிகளையும் எந்தவித நிலுவையும் இல்லாமல் வசூலிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கியிருக்கின்றார்.

இதனால் இந்த மாதம் முதல் வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள், வாடகை பாக்கி, வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது.