விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியது. விஜய் டிவியில் நேற்று மாலை 6 மணிக்கு கிராண்ட் பினாலே நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவின், அசீம், விக்ரமன் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

முன்னதாக பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு கதிரவன், அமுதவாணன் வெளியேறி விட்டார்கள். மேலும் இடையில் மைனா நந்தினி எலிமினேட் செய்யப்பட்டார். இதில் டைட்டில் வின்னர் பட்டத்திற்காக அசீம், விக்ரமன், ஷிவின் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த மூன்று பேரில் யார் வெற்றியாளர் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிக் பாஸ் டைட்டிலை விக்ரமன் வெல்லுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் மூன்றாம் இடத்தை சிவின் பெற்றார். இதன் பின் டைட்டில் வின்னரை அறிவிக்க கமல்ஹாசன் விக்ரமன் மற்றும் அசீம் உள்ளிட்டோரின் கைகளை பிடித்திருந்தார். இதன்பின் அசீம்-ன் கையை உயர்த்தி டைட்டில் வின்னர் என அறிவித்தார். இதன் மூலம் பிக்பாஸ்-6 டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி சென்றார். மேலும் அவருக்கு பிக்பாஸ் கோப்பை வழங்கப்பட்டது. அத்தோடு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கூடுதலாக கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் 2-வது இடத்தை  பிடித்திருக்கின்றார்.