தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருஸ்பர்னாந்திர்க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.பி கனிமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, முதல்வரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத்தின் தந்தை என போற்றப்படும் குரூஸ்பர்னாந்துக்கு 77.87 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகின்றது. இந்த மணிமண்டபம் எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறத்தில் 376.60 சதுர அடி பரப்பில் முழு உருவச் சிலையுடன் அமைக்கப்பட உள்ளது. மண்டபத்தை சுற்றி இருக்கும் பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளார்.