இந்தியா மீது போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக் கொண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான பெக்ரித் தலிபான் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவுடன் நடந்த போரில் பல பாடங்களை கற்றுக்கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் அமைதியையே விரும்புகின்றது. பாகிஸ்தானில் பொறியாளர்கள், மருத்துவர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த விலைமதிப்பற்ற சொத்துக்களை முறையாக பயன்படுத்தி வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தார். போரின் மூலம் பாகிஸ்தான் பல பாடங்களை கற்றுக் கொண்டது. அமைதியாக வாழ்ந்து இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.