பிப்ரவரியில் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

பூலோகம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற வருடம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

அதன்படி பிப்ரவரி 17 அல்லது 24 ஆம் தேதிகளில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகின்றது. இந்த படத்தில் ஜெயம் ரவி கடல் கொள்ளை கேங்ஸ்டர் ஆக நடித்திருப்பதாகவும் நடிகை பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க சாம்  இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படமாக இத்திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.