கல்குவாரிகளின் கனரக வாகனங்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது.

இங்கிருந்து கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி போன்றவை பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்களுக்கு பின்னே செல்லும் வாகனங்களில் சரலைகள் விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.