கண்ணீர் என்பது சோகம், மகிழ்ச்சி, அளவுக்கு அதிகமான வெறுப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இயற்கை விஷயமாக இருக்கின்றது. அதுபோல மனிதனின் பலவீனத்தை வெளிப்படுத்தும் விஷயமாகவும் கண்ணீர் இருக்கின்றது. ஆனால் அழுகை நல்ல மன அரோக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க பெரிய அளவில் உதவுகின்றது என்ற உண்மை பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருக்கின்றது. அழுகை மனதில் மறைந்திருக்கும் ஆழமான கஷ்டங்களை வெளியேற்றும் முக்கிய கருவியாகவே இருக்கின்றது.
இதனால் அழுகை, மனிதர்களின் கசப்பான நினைவுகளை மறப்பதற்கு உதவுகின்றது. அதுபோல வார்த்தைகளால் கசப்பான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தயங்கும் மக்கள் தங்களின் உணர்வுகளை கண்ணீர் வழியாக வெளிப்படுத்த விரும்புகிறார்கள். மன ரீதியாக மட்டுமல்லாமல் கண்ணீர் உடலையும் பலப்படுத்துகிறது. மன கஷ்டத்தால் வெளியேறும் கண்ணீர் வழியாக மன அழுத்தம் நிறைந்த ஹார்மோன்கள் மற்றும் தேவையில்லாத நச்சுகள் வெளியேறுகின்றன.
இதனால் உடலில் நச்சுக்கள் நீங்கி பெரும்பாலான உடல் பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகின்றது. குறிப்பாக இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படுவது இல்லையாம். மனம் விட்டு அழுவது அவசியம். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அழ வேண்டிய அவசியம் இல்லை. சில சமயம் திடமான மனநிலையோடு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தனி மனிதனும் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளை சமாளிக்க தங்களுக்கு என்று ஒரு வழியை பழகிக் கொள்ள வேண்டும். அதாவது நண்பர்களிடம் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வது தியானத்தை பழக்கப்படுத்திக் கொள்வது, பாடல் கேட்பது போன்ற பல விஷயங்களையும் இதற்கு நாம் எடுத்துக்காட்டாக சொல்லலாம். இப்போது தெரிகிறதா? மனம் விட்டு அழுதால் மாரடைப்பு வருமா? வராதா?